பாலியல் அத்துமீறல்களும், பெண்ணுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யாத அவலச் சூழல்களும் நிலவும்போது தம்பி கி.மணிவண்ணனின் இந்த நூல் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
- தமிழச்சி தங்கபாண்டியன்
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்.
புனைவின் வீச்சுக்கு நிஜம் ஈடுகொடுப்பது எப்போதாவது நடக்கும் அற்புதம்.
அதை ’அவள் விகடன்’ இதழில் வெளியான ’யாதுமாகி நின்றாள்’ மூலமாக நடத்திக்காட்டினார் கி.மணிவண்ணன்.
ச. அறிவழகன்
ஆசிரியர், அவள் விகடன்
’அவள் விகடன்’ வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ’யாதுமாகி நின்றாள்’ தொடரை, ’செம்மை மாதர்’ நூலாக முழுமைப்படுத்தியிருக்கிறார் மணிவண்ணன்.
தமிழ்ப் பத்திரிகையுலக வரலாற்றில் இந்த ஐடியா புதியது. இந்த விதையிலிருந்து பல விருட்சங்கள் இனிவரும் காலங்களில் செழித்து வளரும். உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் பல்வேறு வடிவங்களைக் கண்டிப்பாக எடுக்கும். அனைத்துக்கும் ’செம்மை மாதர்’ இன்ஸ்பிரேஷனாகத் திகழும்.
- கே.என். சிவராமன்,
ஆசிரியர், குங்குமம் வார இதழ்.